முகப்பு மதுரை மேலமடை புதிய பாலத்தை மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் திறந்து வைத்தார்.
மதுரையில் பிரமாண்ட மேம்பாலம்.. திறந்து வைத்தார் ஸ்டாலின்.மதுரையில் உள்ள மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.புதிய மேம்பாலத்தில் ஆவின் பால் பண்ணையில் இருந்து மேலே ஏறுகின்ற மற்றும் அண்ணாநகர், கோமதிபுரம் பகுதியில் இருந்து இறங்குகின்ற பாலத்தின் இரு பக்கங்களிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார். 950 மீட்டர் நீளமுள்ள இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.