மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

11 December 2025

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் வருகின்ற 16ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளதால் இந்த நாட்களில் அதிகாலையில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சந்நிதி முன்பாக வழக்கம் போல் திருஞான பால் வழங்கப்பட உள்ளது. 

மேலும் இதனை ஒட்டி வெளி கோபுர கதவுகள் அதிகாலையில் மூன்று முப்பது மணிக்கு திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சி கால பூஜை முடிவடைந்து நண்பகல் 12 மணிக்கு நடைசாற்றப்படும். இதனைத் தொடர்ந்து மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பல்லாக்கு புறப்பாடு நடைபெற்று பூஜை ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூஜைகள் இரவு 9:30 மணிக்குள் முடிவடைந்து கோவில் நடை சாற்றப்படும் எனவும் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது....