மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்வு
10 March 2026
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் விமான நிலைய ஓடுதளம் நீட்டிக்கப்படவும், புதிய முனையம் அமைக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உட்பட மொத்தம் 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.