விட்டாச்சு லீவு- அவசர வழக்குகளுக்கு மட்டும் விசாரணை..

30 April 2021

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை ஆகிய இரண்டு நீதிமன்றங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 

 
சென்னை ஐகோர்ட்டு உள்பட நீதிமன்றங்கள் கோடைகாலத்தில் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகிய இரண்டு ஐகோர்ட்டிலும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்றும் அதற்காக 8 நாட்கள் மட்டும் விடுமுறைகால நீதிமன்றம் இயங்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது 

 
இதனை அடுத்து கோடை விடுமுறை காலம் முடிவடைந்து ஜூன் 1-ஆம் தேதி தான் நீதிமன்றம் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது in