திருப்பூர் சி டி சி காங்கேயம் பிரதான சாலை பகுதி,குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகும்.
நொய்யல் வீதி.செல்லப்பபுரம்.
கே எஸ் சி.மாநகராட்சி நடு நிலை உயர் நிலைப்பள்ளிகளும் அல் அமீன் மற்றும் பழனியம்மாள் பெண்கள் பள்ளியும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தளங்களும் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் போன்றவைகள் அதிகம் இருப்பதால்.
இங்கு எப்பொழுதும் மக்கள் கூட்டமும் வாகன நெருக்கடிகள் நிறைந்து கானப்படும் அதுவும் காலை மாலை பள்ளிகூடங்கள் தொடங்கும் போதும் முடியும் போதும் பெரும் நெருக்கடிகள் ஏற்படும் இதனாலேயே கடந்த 18-11-2025. ம்தேதி இப்பகுதியில் மிகவும் கடுமையாக ஆக்கிரிமிப்புகள் அகற்றப்பட்டன இப்படிப்பட்ட நிலையில் மிகவும் கம்பிரமான வலுவான நிலையில் உள்ள 15.க்கும் மேற்பட்ட
மாடுகள் தினமும் நடு ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூராக செல்வதும் சில நேரங்களில் ஆக்ரோஷமாக மோதிக்கொள் வதும் வாகனங்களில் செல்பவர்களை பள்ளிக் கூடம் போகும் மாணவ மாணவியர்கள் குழந்தை கள் ஆகியோர்களை அச்சுருத்தும் விதமாகவும் நடக்கின்றன இது சம்பந்தமாக பலரும் மாநகராட்சி நிறுவாகத்திற்கு வீடியோ மூலம் புகார் அளித்துள்ளனர் பலர் சமூக வலைதளங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தியுள்ளனர் ஆனாலும் இதுவரை சம்பந்தப்பட்டயாரும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை மேலும்
இப்பகுதி வழியே தான் திருப்பூர் மாநகராட்சியில் இருந்து நல்லூர் நகராட்சிக்கும் நல்லூர் காவல் நிலையத்திற்கும் அனைத்து மாநகராட்சி உயர் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் போய் வருகின்றனர் அவர்களும் அவ்வப் போது இந்த மாடுகளால் சிரமத்தை சந்திக்கின்றனர் ஆனாலும் யாரும் மாடுகளை பிடித்து கோ சாலையில் அடைக்கமுயற்சி எடுப்பது இல்லை சென்னை போன்ற பகுதிகளில் தெருவில் திரியும் மாடுகளால் பல உயிர்பலி ஏற்பட்டதுபோல் சி டி சி காங்கேயம் பிரதான சாலைப் பகுதியிலும் இந்த மாடுகளால் உயிர் பலி ஏற்படும் முன் இந்த தெருமாடுகளைப் பிடித்து கோ சாலையில் அடைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்