விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி கவிழ்ந்து 350 க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையில் விழுந்து சிதறின.
ஆனால் சிலிண்டர் எதுவும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இன்னர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உடனடியாக சாலையில் கடந்த சிலிண்டர்களை பொதுமக்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...