அருணாச்சல பிரதேசம் அஞ்சாவ் மாவட்டம் ஹைலியாங்க் பகுதிக்கு நேற்று முன்தினம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.
பத்தாம் தேதிக்குள் அவர்கள் ஹையுலியாங்க் நகரை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வந்து சேரவில்லை என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது லாரியில் வந்த தொழிலாளர்கள் சகலகம் சாலையில் மலை பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்று பார்த்தபோது அங்கு 21 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்....