சுவர் இடிந்து மூதாட்டி பலி- விழுப்புரம் எம்பி கோரிக்கை
23 October 2025
சுவர் இடிந்து மூதாட்டி பலி- விழுப்புரம் எம்பி கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மரக்காணம் அருகே, ஆலந்தூர் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பச்சையம்மாள் என்கிற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மூதாட்டியின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவியை வழங்க விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்