சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு தர்மபுரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு
20 February 2026
தர்மபுரியில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 32 வயது தொழிலாளி பாபு என்பவருக்கு, தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசின் பானு, பாபு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.