எலுமிச்சை சாறை நாம் பல்வேறு விதத்தில் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நமக்கே அறியாத சில விஷயங்கள் இந்த எலுமிச்சை சாறு பற்றி உள்ளன. அந்த வகையில் பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கு சுக்கை தூளாக்கி எலுமிச்சை சாறில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் குறையும். இதேபோன்று மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கொதிக்க விட்டு ஆறிய பின் மூட்டுகளில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.