தமிழக அரசு சார்பில் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
அதில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தேர்வுகள் 38 மாவட்டங்களில் 195 மையங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தேர்வினை எழுதும் தேர்வர்கள் நுழைவுச்சீட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைதீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....