குப்பை கொட்ட போதிய இடம் இல்லை தடுமாறும் டாலர் சிட்டி குப்பை கொட்டுவதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம்.

20 November 2025

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் தமிழகத்தையும் பிற மாநில மக்களையும் வாழ வைக்கும் பனியன் சிட்டியான திருப்பூர் மாவட்டம், வெளிநாட்டு வர்த்தகம் மூலம் அன்னியச் செலவானியாக வருடம் சுமார் 15 ஆயிரம் கோடியும்.உள்நாட்டு வர்த்தகம் மூலம் வருடத்திற்கு சுமார் 4000 கோடியும்  பெற்று தருவதாக கூறப்படுகிறது 

இப்படிப்பட்ட திருப்பூரில் அடிப்படை வசதிகள் என்று எங்கும் இல்லை வேலை வேலை என்று மக்கள் ஒரு இயந்திரம் போல் ஓடிக் கொண்டிரு ப்பதால் திருப்பூரில் உள்ள குறை களை கண்டும் காணாமலும் மக்கள் சகித்துக் கொண்டும் போய் வருகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் 

திருப்பூர் மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக இருப்பது குப்பை பிரச்சினை தான் 60 வார்டுகளை கொண்ட திருப்பூரில் சுமார் தினமும் 800 டன் குப்பைகள் சேகார மாகிறது இதை கொட்டுவதற்காக திருப்பூரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பாறை குழிகளை கடந்த 15 வருடங்களாக மாநகராட்சி பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் மொத்த பாறை குளி களையும் குப்பைநிறைந்து,மேலும் கொட்டமுடியாத நிலையில் உள்ளது 
இதைத் தொடர்ந்துமாநகராட்சி நிர்வாகம் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ளஇடங்களில் குப்பைகளை கொட்ட முயற்சித்து வருகின்றன அதன்படி முதலிபா ளையம் நல்லூர்க்கு இடைப்பட்ட இடத்தில் உள்ள தனியார் பாறைக்குளியில் குப்பைகள் கொட்ட முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர் மேலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடுத்து பாறை குழியில் குப்பைகள் கொட்ட தடையும் வாங்கினர் 
அதன் பின் மாநகராட்சி நிர்வாகம் திருப்பூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தள்ளியுள்ள முதலி பாளையம் பகுதியில் குப்பைகள் கொட்ட முடிவெடுத்து செயல்பட தொடங்கின இதனால் அப்பகுதி மக்கள் முதலிபாளையம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு என்ற பெயரில் குழுவை அமைத்து கடும் போராட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதனிடையே முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் 19-11 2025 அன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாய் தலையணை பெட்சீட்டுடன் வந்த மாநகராட்சி முன்பு ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது கேவிஆர் நகர் உதவி போலீஸ் கமிஷனர் ஜான் தலைமையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர் இதில் 90 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப் பட்டனர் அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் போராட்டக் காரர்கள் மண்டபத்திற்குள் செல்லாமல் வாசலிலே மதிய உணவு உண்ணாமல் உண்ணா விரதம்  மேற்கொண்டனர் மேலும் பாறைக்குளியில் இனி குப்பைகளை கொட்டு மாட்டோம் என்றும் அதில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள்  உறுதியளிக் குமாறு தொடர்ந்து கோஷம் எழுப்பினர் 

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர் .