சிறப்பு மிக்க குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

25 November 2025

இன்றைய ஆன்மீகப் பகுதியில் குலசேகரப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் வரலாறு குறித்து பார்க்கலாம். 

குலசேகர பாண்டிய மன்னன் சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றி பெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரள நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுரம் மன்னனிடம் தோல்வியுற்றார். அதுமட்டுமின்றி வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்ட பாண்டிய மன்னன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றி பாண்டிய மன்னா தூங்கி விடாதே தூங்கி உன் நாட்டின் பெருமையை இழந்து விடாதே ஒரு முறை தோற்றால் என்ன மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசீர்வதித்து மறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் படையெடுத்துச் சென்ற பாண்டிய மன்னன் போரில் வெற்றி பெற்றார். மேலும் இதனால் அம்மனுக்கு பாண்டிய மன்னன் கோவில் கட்டியுள்ளார். மன்னனின் நினைவாக அந்த ஊர் குலசேகரப்பட்டினம் என பெயர் பெற்றது. 

இந்த குலசேகரப்பட்டினத்தில் எட்டு வகை காளியம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இந்த முத்தாரம்மன் கோவில். 

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடவுள் வேடங்கள் அணிந்து வீதி உலா செல்வது வழக்கம். இதுபோன்று வேடம் அணிந்து கடவுளை வணங்குவது வேறு எங்குமே இல்லாத ஒரு சிறப்பாகும்.

இந்த கோவில் பெருமளவிற்கு மக்களுக்கு தெரியாமலே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பொதுவாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்குள்ள கடலில் நீராடி விட்டு செல்வது வழக்கம். ஆண்டுதோறும் தசரா பண்டிகையை ஒட்டி இங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் தற்போதுள்ள காலகட்டங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை தவிர்த்து திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்....