தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இன்று பைக் மீது கார் மோதி விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.
கோவில்பட்டி தோனுகால் விளக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பைக் வந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர்...
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...