செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

18 November 2025

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது .இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் மற்றும் அலுவலகம் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என எச்சரிக்கை செய்துள்ளது.இந்தப் பகுதியில் உள்ள மீனவர்களும் கடலின் சீற்றம் காரணமாக இரண்டு நாட்களாக கடலுக்கு செல்லவில்லை என குறிப்பிடத்தக்கது.