ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் ராமேஸ்வரம் இடையே முன்பதிவிலா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் வண்டி ( வண்டி எண் 06123 வருகிற 29ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயில் மறுநாள் காலை 3.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
அதேபோல மறுமார்க்கமாக வருகின்ற 30ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 10 15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை ஏழு முப்பது மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது...