சிவகாசி :-
சிவகாசியில் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளும் சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள், கண்டு கொள்ளாத ஆணையாளர். பொது மக்களின் குறைகளை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்.. ஆம் மக்கள் தங்களது குடியிருப்புகள், மற்றும் வணிக வளாக கட் டிடங்களுக்கு பெயர் மாற்றம் செய்திட கொடுக்கும் மனுக்களுக்கு மனு கொடுத்து சுமார் மூன்று,நான்கு மாதங்கள் ஆகியும், இன்னும் தீர்வு ஏற்படவில்லை, இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மக்கள் தொடர்பு கொண்டு கேட்டால் அவர்கள் ஆணையாளரை காரணம் காட்டுகிறார்கள் இதில் எது உண்மை என்று தெரியவில்லைஆக மொத்தம் அதிகாரிகளாள் ஏற்படும் மொத்த அவப் பெயரும் இன்றைய ஆளும் அரசையே சேர்கிறது. பெரும்பாலும் மக்கள் மத்தியில் இன்றைய ஆளும் அரசுக்கு நல்ல பெயர் தான் இருக்கிறது என்றாலும் அதை கெடுத்திட அதிகாரிகளின் மெத்தன போக்கே போதும் , ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக முற்று புள்ளி வைத்தால் ஒழிய சிவகாசி தொகுதி மக்களின் மனதில் ஆளும் அரசின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போவதில் சிறிதளவும் இயமில்லை....
கொற்றவை ரிப்போர்ட்டர் :
நிருபர் : சிவகாசி கா. பாலா