தமிழக அரசின் தொழில் முனைவோர் பயிற்சி !
17 April 2025
தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக ஒரு நாள் குளியல் சோப்பு தயாரித்தல் பயிற்சி பட்டறை 16.4.2025 அன்று ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய், சர்கோல், வெப்ப எண்ணெய், காற்றாலை, குப்பை மேனி சோப்பு தயாரித்தல் முறைகள் பற்றி பயிற்றுநர் திருமதி சௌமியா பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி ஏற்பாடுகளை EDII TN ஈரோடு மாவட்ட திட்ட மேலாளர் முனைவர் சசிகுமார் செய்திருந்தார்.