கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

23 October 2025

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கல்லணை மற்றும் மேல் அணையில் இருந்து வினாடிக்கு 50000 கன அடி நீர் கடந்த இருபதாம் தேதி கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக வினாடிக்கு 60,000 கன அடி வரை அதிகரிக்க கூடும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்...