பணப்பிரச்சனையில் மனைவி அடித்துக்கொலை முதியவர் வெறிச்செயல்

10 November 2025

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே கணபதிபாளையம் அப்பியம் காட்டை சேர்ந்தவர் பெரியசாமி, 76, இவரது மனைவி புஷ்பாத்தாள், 65. இவர்களுக்கு பரமசிவம் முருகேஷன் என இரண்டு மகன்கள் உள்ளனர். 
இதில் டிரைவரான முருகேசன் அதேபகுதியில் தன் மனைவி பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறார்.பரமசிவம் பெற்றோரு டன், வசித்து வந்தார். 
பெரியசாமி - புஷ்பாத்தாள் தம்பதியினர் ஆடுமாடு வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 
வயது மூப்பின் காரணமாக ஆடு மாடுகளை பார்த்து பராமரிக்க முடியாததால்  இருவரும் சேர்ந்து ஆடுமாடுகளை விற்றுள்ளனர். இந்நிலையில் ஆடுமாடுகளை விற்றப் பணத்தை புஷ்பாத்தாள் தன் கணவரிடம் கொடுக்காமல் வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதில் அந்தப்பணத்தை தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார் பெரியசாமி  ஆனால்  அவர் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. .இதனால் ஆத்திரம் அடைந்த பெரியசாமி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் கோபத்தில் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து மனைவி புஷ்பாத்தாளை சராமாரியாக தாக்கினார். 
இதனால் அவர் அங்கேயே இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் இதை கவனித்த  அக்கம்   
பக்கத்தினர்  படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த புஷ்பாத்தாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இருப்பினும் சிகிச்சை பலனின்றி புஷ்பாத்தால் இறந்து விட்டார். இது குறித்து வெள்ளகோவில்
போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மனைவியை அடித்துக் கொன்றதற்காக பெரிய சாமியை கைது செய்தனர். 
ஆடுமாடுகளை விற்றப் பணத்தை தராததால்  மனைவியை கணவரே அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மா.ஜாபர் அலி.செய்தியாளர்
திருப்பூர்.