குட்கா கடத்தியவர்கள் கைது
26 October 2025
விழுப்புரம் குட்கா கடத்தியவர்கள் கைது
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர், அப்போது பெங்களூரில் இருந்து கொரியர் மூலமாக குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 1 ஆட்டோவில் 2000க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து குபேந்திரன், சஞ்சீவ் காந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.