கேரளாவில் இளைஞர் தற்கொலைக்கு காரணமான பெண் கைது

21 January 2026

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என்ற 35 வயது பெண், பேருந்து பயணத்தின் போது ஒருவர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதில் குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்ற வாலிபர் பெரும் அவமானத்திற்கு உள்ளாகி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.


விசாரணையில், சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக அந்தப் பெண் திட்டமிட்டு போலிக் குற்றச்சாட்டை முன்வைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை கேரள காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.