கேரளா: சபரிமலையில் இரண்டு நாட்களில் வரலாறு காணாத கூட்டம்!!! பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்கின்றனர்!!!திரும்பி

20 November 2025

கேரளா:    கேரளா மாநிலம் சபரிமலையில் நவம்பர் 15 தேதி நடை திறக்கப்பட்டு மண்டல சீசன் துவங்கிய இரண்டு நாட்களிலயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்களும் கோவில் தேவசம் போர்டும்‌ திணறுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70 ஆயிரம் பேரும் ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவர் என அறிவித்த நிலையில் இந்த நவம்பர் மாதத்தின் அனைத்து முன்பதிவும் நிறைவு பெற்றது. எருமேலியில் இருந்து வரும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர், நிலக்கல்லிலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மணி நேரம் வரிசையில் நின்ற பகுதியில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சில பக்தர்கள் பம்பையில் தங்கள் சடங்குகளை முடித்துக் கொண்டு ஐயனை தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்கின்றனர்.  நவம்பர் 16ஆம் தேதி மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 594 பேர் தரிசனம் செய்துள்ளனர். வரும் காலங்களில் இன்னும் கூட்டம் அதிகரிக்கலாம் எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளா அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ச.சந்திரமோகன்,
செய்தியாளர், திண்டுக்கல் மாவட்டம்.