கேரளாவில் ஆறு வயதுக்கு குழந்தை குளத்தில் சடலமாக மீட்பு

28 December 2025

கேரள மாநிலம் பாலக்காடு எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் மற்றும் அவரது மனைவி தூகிடா ஆகிய இருவருக்கும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் குழந்தைகள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணன் சுகனுடன் சண்டையிட்ட ஆறு வயது குழந்தை ரயன் அழுது கொண்டே வீட்டை விட்டு சென்றுள்ளான். 

நீண்ட நேரமாக குழந்தை வீட்டிற்கு வராததால் குழந்தையின் தாய் சுகனிடம் தம்பி எங்கே என விசாரித்த இப்போது சிறுவன் தாயிடம் நடந்ததை கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் சிறுவனை பல இடங்களிலும் தேடி இறுதியில் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசாரம் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடிய பின் அந்த கிராமத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குளத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். 

இதனை அடுத்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்... இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...