கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான கென்யாவில் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு மரக் வெட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் இந்த நிலச்சரிவில் மாயமாகினர். இதனைத் தொடர்ந்து மாயமான 30 பேரை தீவிரமாக தேடும் பணியில் அப்பகுதி மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.