திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஆலத்தூரில் அருள் தரும் கரியகாளியம்மன் உடனமர் அருள்மிகு மகாகாளீசுவரர் திருக் கோயிலின் 14.ஆண்டுப் பெருவிழா மற்றும் அம்மையப்பர் திருமண விழா ஆகியவை நடைபெற்றது
ஆலத்தூரில் எழுந்தருளி பன்னெ டுங்காலமாக அருள் பாலித்து வரும் அன்னை அருள்தரும் கரிய காளியம்மன் கோவில்.
பில்லகுல கொங்கு பால வேளாளக் கவுண்டர்கள்.சம்பங்குல செங்குந்த முதலியார்கள்.பூளுவகுல வேட்டு வக் கவுண்டர்கள்.ஆகிய மூன்றுக் குலக் பெருமக்களின் குலதெய்வ மாகவும் மற்றும் பல்வேறு மக்க ளின்.அருள் தரும் தெய்வமாகவும் விளங்குவதோடு
அருள்மிகு மகா காளீசுவர்ருடன் வீற்றிருந்து அம்மையப்பராக, வழிபடும்அனைவருக்கும் கருணை மழை பொழிந்து வருகின்றனர் கடந்த 2025.ம் வருடம் பிப்பரவரி 13.ம் தேதி இத்திருக்கோயிலின் இரண்டாவது திருக்குடநன்னீராட்டு நடைபெற்ற நிலையில்,
14.ம் ஆண்டுப்பெரு விழாவும் அம்மையப்பர் திருமண விழாவும் மாசித்திங்கள் 18.ம் நாள் மாசிமகத்தன்று நடைபெற்றது அதைத் தொடர்ந்து வேள்வி வழி பாடு.சிறப்புத் திருமஞ்சனம்.கலச நன்னீராட்டு.சிறப்பு அலங்காரத்து டன் அம்மையப்பர் திருமண விழா. திருத்தேர் பவனி.பௌர்ணமி வழி பாடு.ஆகியவைகள் நடைபெற்றது
இந்நிகழ்வில் பேரூர் செயலர் மணிவாசகர் அருட் பணி மன்ற அறக்கட்டளையின் சிவத்திரு.
ப.குமரலிங்கம் அவர்கள் வேள்விப் பணியை நடத்தியிருந்தார்.
இதில் அருள் மிகு கரியகாளியம்மன் வழி பாட்டு மன்ற அறக்கட்டளை குழுவினர்கள் திருக்கோயில் கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கழந்து கொண்டு அம்மையப்பரின் அருளாசியைப் பெற்றனர்.
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.