காசா குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

14 November 2025

ஹமாஸ் ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் போர் நடைபெற்று வந்த நிலையில் காசாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தப் போரை நிறுத்த சர்வதேச நாடுகளும் தொடர்ந்து போராடிவரும் நிலையில் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் ஓர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் காசாவில் ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பெற முடியாத நிலையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஐநா குழந்தைகள் அமைப்பான யூனிசெப் சார்பில் காசாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தட்டம்மை நிம்மோனியா உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நவம்பர் 9ஆம் தேதி இந்த முகாம் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஏராளமான குழந்தைகள் இதன்மூலம் பயன் பெற்றுள்ளனர்.