கரூர் மாவட்டத்தில் திமுக முப்பெரும் விழாவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது .
08 September 2025
கரூர் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கின்ற திமுக முப்பெரும் விழாவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு. இன்று கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடங்கிபட்டி பிரிவு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் இன்று காலை முகூர்த்த கால் போடப்பட்டது.
இவ்விழாவானது கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, திரு செந்தில் பாலாஜி MLA அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கும் மாபெரும் முப்பெரும் விழா. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், மற்றும் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள இருப்பதால் இவ்விழாவானது கரூர் மாவட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது உள்ளூர் திமுக பிரமுகர்களின் கணக்கு. எனவே செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் மாவட்டம் திருவிழா கோலம் போன்று காணப்படும். இவ்விழா ஏற்பாட்டினை செந்தில் பாலாஜி விரைந்து செயல்பட்டு வருகிறார்.