கரூரில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் தொடர்ந்து இருந்த இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும் அந்த குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.