காரைக்குடியில் டாக்டர் அம்பேத்கரின் 70 வது நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்குடியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக டாக்டர் பிஆர் அம்பேத்கரின் 70 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காரைக்குடி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்னவன், மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.