கந்தசஷ்டி விரதம் தொடக்கம் : முருகனுக்கு சிறப்பு வழிபாடு

22 October 2025

கந்த சஷ்டி விரதம் இன்று முதல் தொடங்குகிறது. இதனை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முருக பெருமான் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கந்த சஷ்டியை ஒட்டி முருக பக்தர்கள் ஏழு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இன்று தொடங்கியுள்ள கந்தசஷ்டி விழாவை ஒட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

குறிப்பாக விராலிமலை பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை கணபதி ஹோமம் முடிந்தவுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் சிறப்பாக தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவை ஒட்டி தொடர் பூஜைகள் சுவாமிகளுக்கு நடைபெற உள்ளன. மேலும் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.