கமல் நடிக்கும் 'விக்ரம்' - இன்று வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்!

10 July 2021

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் நேற்று அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ’விக்ரம்’ படத்தின் டீசரை லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் செய்தார் என்றும் அதில் வேற லெவல் காட்சிகள் இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் படப்பிடிப்பு ரகசியமாக நடந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் ’விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து கமல் ரசிகர்கள் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.