பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சரவணன் இன்று காலை இயற்கை எய்திய நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஏவிஎம் சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் தம்பி உறவு போன்றது என தெரிவித்துள்ளார். மேலும் நான் தனி மரம் அல்ல ஏவிஎம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன் என்று பெருமையாக அவர் பேசியுள்ளார். மேலும் இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது என்றும் அவர் பேசியுள்ளார்....