திருக்கோவிலூரில் கபிலர் குன்று ஓவியம், கட்டுரைப் போட்டிகள்; மாணவிகளுக்குப் பரிசளிப்பு

05 December 2025

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் "என் பார்வையில் கபிலர் குன்று" என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், தொன்மையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது..
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குத் தலைமையாசிரியர் சு.கீதா தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வரலாற்று ஆசிரியர் மா.அல்லி வரவேற்றார். தொல்லியல் துறையின் மாவட்ட அலுவலர் க.சுரேஷ் வெற்றி பெற்ற மாணவிகளுக்குக் கேடயம் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் மாணவிகள் 50 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.



---PS Parthi