கள்ளக்குறிச்சியில் பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கல்வராயன் மலையின் கம்பீரமும் ஆன்மீகமும் நிறைந்த கள்ளக்குறிச்சியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் நம்மை பார்த்து பின்பற்றக்கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மூன்று புள்ளி 18 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் கள்ளக்குறிச்சி பயன்பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்....