வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தினமும் 50 பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கிட்டு படிவங்களை வழங்கலாம் என்று கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. அதன்படி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு அதை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெற்று வருகின்றனர்.
வருகிற 4.ம் தேதிக்குள் கணக்கிட்டு படிவங்களை திரும்ப வழங்க வேண்டும் என்று அறிவுத்தப் பட்டுள்ளது இந்த பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் அலுவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் திரும்ப பெறப்படும் படிவங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் தொடர்பாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனப் பிரச்சாரமும் நடக்கிறது இந்நிலையில் திருத்த பணிக்கு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் ஒத்து ழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளின் படி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் சார்பாக நியமிக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தினசரி பூர்த்தி செய்யப்பட்ட 50 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர் களிடமிருந்து பெற்று உரிய உறுதி மொழியுடன் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார் மேலும்
வருகிற 4.ம் தேதிக்குள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத வாக்காளர் களின் பெயர்கள் வருகிற 9.ம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டிலில் இடம் பெறாது என்றும் கூறினார் இதனிடையே வாக்காளர் கணக்கீட்டு படிவங் களை திரும்ப பெற சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டதில் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர் திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் கணக்கீட்டு படிவம் பெறும் பணி நடந்தது
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.