நாடாளுமன்ற குளில்கால கூட்டத்தொடர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ் ஐ ஆர் குறித்த விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் ஜனநாயகத்தை சிதைக்கும் நோக்கில் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக இது குறித்து பேசிய எம் பி தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர். மேலும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் சிறந்த ஒரு நபர் கலைஞர் ஆவார். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் ஏழை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் செயல்பட்டவர் எனவே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அவர் கூறினார்...