கலைஞர் கனவு இல்லம்: மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

12 February 2026

தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், தற்போது கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.


இதற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு, 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கூடிய புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படுகின்றன.

ஏற்கனவே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 7,000 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.