இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரும் கோரிக்கையை வைக்கின்றனர்!!

11 February 2025

அருப்புக்கோட்டை பிப்ரவரி 9. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ரயில்வே மேம்பால சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால். இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரும் கோரிக்கையை வைக்கின்றனர். அருப்புக்கோட்டை புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை வழியாக கிட்டத்தட்ட 1500 க்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து பல இடங்களில் குண்டு குலியுமாக இருப்பதால் வாங்கின ஓட்டிகள் அதன் வழியாக சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் இந்த குண்டு குலியுமான சாலையில் செல்வதால் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. தற்பொழுது பந்தல்குடி தூத்துக்குடி நான்கு வழி சாலையை சரி செய்து வருகின்றனர். இதேபோல் ரயில்வே மேம்பால சாலையையும் சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன. செய்தியாளர் செல்லப்பாண்டியன்