தெற்கு ஜப்பான் சஹானோசகி மாகாணத்தில் உள்ள ஒயிட்டா கடற்கரை நகரத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணத்தால் 170 வீடுகள் எரிந்து நாசமாகின. மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 175 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் தண்ணீர் மற்றும் மணலை தூவி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்...