ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

08 December 2025

ஜப்பான் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 7:45 மணி அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிட்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பானில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் வீதி அடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவித சேதமும் பாதிப்பும் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை...