ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் கும்காடி பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிரவாதிகள் சிலர் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது பாதுகாப்பு படையினரை நோக்கி சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனடியாக பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதன் மூலமாக எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. மேலும் வந்தவர்கள் யார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.