விரைவில் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

05 January 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), இந்த மாதம் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கைக்கோளுடன் சேர்த்து, கூடுதலாக 18 இணை செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

இந்தத் திட்டத்திற்கான முக்கிய செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் எம்.ஓ.ஜி-1 (MOG-1) என்று அழைக்கப்படுகிறது.



பூமியிலிருந்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள 'குறைந்த புவி சுற்றுப்பாதையில்' (Low Earth Orbit) நிலைநிறுத்தப்பட உள்ளது.


இது முக்கியமாக வணிக மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.