முகப்பு இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அறிவுறுத்தல்: இந்தியத் தூதரகம் அவசர அறிக்கை
இஸ்ரேலில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் 'ஹோம் ப்ரண்ட் கமாண்ட்' அமைப்பு வழங்கும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்தியர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தின் வாயிலாகத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக +972-54-7520711 மற்றும் +972-54-3278392 ஆகிய 24 மணிநேர உதவி எண்களையும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.