ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போரில் காசாவில் ஹமாஸ் ஆயுத குழுவினர் உட்பட 68,000 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காசாமனையில் எகிப்து எல்லையில் உள்ள ரபா சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது ஹமாஸ் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் போர் மீண்டும் தொடங்கியுள்ளதால் இரண்டு பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.