இஸ்ரேல்-பொலிவியா நாடுகளிடையே மீண்டும் ஒப்பந்தம்

12 December 2025

இஸ்ரேல் காசா இடையே நடந்து வரும் போரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலுடன் ஆன தூதரக உறவை பொலிவியா முறித்துக் கொண்டது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்று ரொட்ரிகோ பாஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா இஸ்ரேல் உடனான தூதரக உறவை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்து அது குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வந்தன. 

இந்த நிலையில் இன்று இரண்டு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையே புதிய பொருளாதார வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது...