ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரம்: 51 பேர் உயிரிழப்பு; 2,300 பேர் கைது

10 January 2026

ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். போராட்டக்காரர்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அரசு கட்டிடங்களுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்க ஈரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போராட்டக்காரர்களை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது.

தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 
பாதுகாப்புப் படையினர்: 21 பேர்
குழந்தைகள்: 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்
பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 2,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.