மதுரையில் 'தமிழ்நாடு வளர்கிறது' முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வரும் நிலையில் ரூபாய் 37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம் ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.
அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழர் நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மையானது என்பதையே மதுரை எடுத்துக் கூறுகிறது. இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறி வருகிறேன். தென் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மையமாக மதுரை திகழ்கிறது என்று தெரிவித்தார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பொங்க அமைக்க உள்ளம் அதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவித்த முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என நிரூபித்து காட்டியுள்ளோம் என தெரிவித்தார்.