கார் குண்டுவெடிப்பு: விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

11 November 2025

கார் குண்டுவெடிப்பு: விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்


டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் இருந்து வருவோர் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விழுப்புரம் முழுவதும் போலீசார் இரவெல்லாம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்