இந்தோனேசியாவில் நிலச்சரிவு

18 November 2025

இந்தோனேசியா மத்திய ஜாவா மாகாணத்தில் இன்று கன மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. மேலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்து இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து பேரிடர் தனிப்பு கழகம் செய்தி வெளியிட்டுள்ளது அதில் இந்த நிலச்சரிவால் 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்துள்ளனர். மேலும் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.